தேர்தல் பத்திரங்கள் வழக்கு: அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ தாக்கல் செய்ய உத்தரவு..!

Siva
திங்கள், 18 மார்ச் 2024 (11:35 IST)
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ ஏன் தாக்கல் செய்யவில்லை? என கேள்வி எழுப்பிய  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உடனே தேர்தல் பத்திரங்கள் வழக்கில் அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று தேர்தல் பத்திரம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில்  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி சரமாரியாக கேள்வி எழுப்பினார். தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ ஏன் தாக்கல் செய்யவில்லை? உத்தரவிட்டால்தான் தாக்கல் செய்வோம் என்ற போக்கை எஸ்பிஐ கடைபிடிக்கிறீர்களா? என கேள்வி கேட்ட நீதிபதி, ‘உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்காமல் அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யவும் எஸ்பிஐக்கு உத்தரவு பிறப்பித்தார்.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்.பி.ஐ. வசம் இருக்கும் அனைத்து தரவுகளையும் தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து இன்று அல்லது நாளை எஸ்.பி.ஐ, தன்னிடம் உள்ள அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்