ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு!

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (11:43 IST)
அதானி குழும முறைகேடு தொடர்பாக ஹிண்டன்பர்க்  அறிக்கையில் சட்ட விதிமுறைகள் இருந்தால் அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
 கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க்  நிறுவனம் அதானி குழுமம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தது. இதனை அடுத்து அதானி குழுமத்தின் பங்குகள் மிக வேகமாக சரிந்ததை அடுத்து கோடி கணக்கில் நஷ்டம் அடைந்தது. 

ALSO READ: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராட்டம்.. பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு..!
 
இந்த நிலையில் ஹிண்டன்பர்க்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் அதானி குழும முறைகேடு தொடர்பாக ஹிண்டன்பர்க்  அறிக்கையில் சட்ட விதிமீறல் இருந்தால் அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
மேலும் அதானி குழும முறைகேடு புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க  தேவையில்லை என்றும்  முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த செபிக்கு அதிகாரம் உள்ளது என்றும் செபி மூன்று மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்