டெல்லியில் இருந்து சென்ற விமானத்தில் திடீரென புகை மூட்டம் ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் டெல்லிக்கு அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இன்று காலை டெல்லியில் இருந்து ஜபல்பூர் என்ற பகுதிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று கிளம்பியது. இந்த விமானத்தில் விமானிகள் பயணிகள் உள்பட பலர் இருந்தனர்
இந்த நிலையில் விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்திற்குள் புகை வந்ததையடுத்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்
இதனையடுத்து உடனடியாக மீண்டும் டெல்லி விமான நிலையத்திற்கு விமானம் திருப்பிவிடப்பட்டதால் விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் விமானத்தின் கேபிளில் இருந்து திடீரென புகை வந்தது ஏன் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.