வருமான வரி ரத்து: சுப்பிரமணியன் சுவாமி கூறுவது என்ன?

Webdunia
சனி, 12 மே 2018 (15:49 IST)
நாட்டில் வளர்ச்சி வேண்டும் என்றால் நாட்டு மக்கள் செலுத்தி வரும் வருமான வரியை நிறுத்த வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதை பற்றி அவர் கூறியது விரிவாக...

 
நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க முதலீடுகள் மிகவும் அவசியமாகும். முதலீடுகள் உருவாக மக்களிடம் சேமிப்பு இருக்க வேண்டும். சேமிப்பு இருந்தால்தான் மக்கள் தங்கள் பணத்தை வங்கியில் முதலீடு செய்வார்கள். 
 
அதன் மூலம் வங்கிகள் முதலீட்டாளர்களுக்கு கடன் கொடுத்து பொருளாதார வளர்ச்சியை கொண்டுவர முடியும். ஆனால், மத்திய அரசு நடுத்தர வர்க்கத்தினர் மீது வருமான வரியைச் சுமத்தி கொடுமைப்படுத்துகிறது. 
 
நடுத்தர குடும்பத்தினர் மட்டுமல்லாது அனைவருக்கும் வருமான வரியை ரத்து செய்யும் போது, அவர்களின் சேமிப்பு அதிகரிக்கும். அந்த சேமிப்பு முதலீடாக மாறும்.
 
வருமான வரியை ரத்து செய்வதன் மூலம் சேமிக்கப்படும் பணத்தை மக்கள் முதலீடாக மாற்றுவார்கள். முதலீடு அதிகரிக்கும் போது, இயல்பாகப் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். எனவே, வருமான வரி ரத்து செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்