நிதியாண்டு 2016-17, 2017-18 ஆகியவற்றுக்கான வருமானவரி ரிட்டன்கள், 2016-17-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட ரிட்டன்கள் ஆகியவற்றை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
இந்நிலையில், வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக, இன்று அனைத்து வங்கிகளும் இரவு 8 மணி வரை செயல்படும் இதேபோல் ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மற்றும் அனைத்து கிளைகளும் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.