சுப்பிரமணியன் சாமிக்கு “தமிழ் ரத்னா” விருது!

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2016 (11:38 IST)
பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சாமிக்கு அமெரிக்க தமிழ் சங்கத்தின் உயரிய விருதான தமிழ் ரத்னா விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.


 
 
சுப்பிரமணியன் சாமி இந்தியாவில் ஊழலுக்கு எதிராகவும், ஆட்சி முறையில் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காக போராடி வருவதாலும் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது என அமெரிக்க தமிழ் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.
 
இந்த தமிழ் ரத்னா விருதை இதற்கு முன்னர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குனர் பாரதிராஜா ஆகியோரும் பெற்றுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்