மொபைல் போன் வெளிச்சத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள்: விசாரணைக்கு உத்தரவு!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (12:37 IST)
மொபைல் போன் வெளிச்சத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள்: விசாரணைக்கு உத்தரவு!
மொபைல் போன் வெளிச்சத்தில் மாணவர்கள் தேர்வு எழுதிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 
 
கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் பகுதியில் கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது.
 
இதனை அடுத்து மொபைல் போன் வெளிச்சத்தில் தேர்வு எழுத மாணவர்களுக்கு தேர்வு கண்காணிப்பாளர்கள் அனுமதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளன
 
 திடீரென பெய்த கனமழையால் மின்வெட்டு ஏற்பட்டதாகவும் தேர்வு எழுதும் நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டது குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்