சி.பி.எம். பொதுச் செயலாளராக யெச்சூரி 3வது முறையாக தேர்வு!
திங்கள், 11 ஏப்ரல் 2022 (08:30 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று கேரளாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக மீண்டும் சீதாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு முறை அவர் இந்தப் பதவியில் இருந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மூன்றாவது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சீதாராம் யெச்சூரிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.