இந்த விவகாரம் தொடர்பாக விசாரண நடத்திய சுப்ரீம் கோர்ட், பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்ஹ்டது செல்லாது என தீர்ப்பளித்தது. இம்ரான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நடத்த வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில், இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார். எனவே இன்று மீண்டும் பாராளுமன்றம் கூடியது. இதில் பாகிஸ்தான் பிரதமராக ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாளை அவர் பிரதமராகப் பதவியேற்கலாம் எனக் கூறப்படுகிறது.