ஏற்கனவே இந்த திட்டம் குஜராத் மற்றும் கேரள மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த திட்டம் தமிழகத்திலும் கொண்டு வரப்படவுளது. குஜராத்தில் இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 16 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஆண்டொன்றிற்கு 90 லட்சம் லிட்டர் தண்ணீர் ஆவியாகாமல் தடுக்கப்படுகிறது. அதேபோல் கேரளாவிலும் இந்த திட்டத்தால் வருடத்திற்கு ஏழரை லட்சம் யூனிட் மின்சாரம் கிடைத்து வருகிறது.
தமிழகத்தில் இந்த திட்டத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் மற்றும் இந்திய சூரிய சக்தி கழகம் இணைந்து, ஆயிரத்து 25 கோடி ரூபாய் செலவில், செயல்படுத்தவுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் தெரிவித்தார்.