மல்லையாவின் ப்ளான் படி நீரவ் மோடி? - இங்கிலாந்திடம் அடைக்கலம்

திங்கள், 11 ஜூன் 2018 (13:22 IST)
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி ரூ.13,578 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 
 
நீரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ரொக்கப்பணம், டெபாசிட்கள், சொகுசு கார், இறக்குமதி செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள், வீடுகள், நிலம் என பலதரப்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டன. 
 
மோசடி வழக்கில் சிக்கியுள்ளா நீரவ் மோடி இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடு சென்று விட்டார். அவர் அமெரிக்காவில் தங்கி இருக்கக்கூடும் என முதலில் தகவல்கள் வெளியாகின. லண்டனில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், இந்த சூழலில், நீரவ் மோடி இங்கிலாந்திடம் அடைக்கலம் அளிக்குமாறு கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காக தான் துன்புறுத்தப்படுவதாகவும், அதனால் தனக்கு அடைக்கலம் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது. 
இதுபோன்று ஏற்கனவே பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கடன் வாங்கி லண்டன் தப்பிச்சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்