மே 16 வரை ஊரடங்கு நீட்டிப்பு... அறிவிப்பு விரைவில் வெளியாகுமா?

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (11:02 IST)
ஊரடங்கை மே 16 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மாநில முதல்வர்கள் கோரியதாக தெரிகிறது. 
 
கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு மே 3 வரை ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் மே 3 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். 
 
பிரதமருடனான ஆலோசனையில் தமிழக முதல்வர் பழனிசாமி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்கும்படி மாநில முதல்வர்கள் கோரியதாக தெரிகிறது. 
 
ஆம், ஊரடங்கை மே 16 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, பீகார் ஆகிய 5 மாநில முதலமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர். 
 
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம் ஆகிய 6 மாநில அரசுகள் மத்திய அரசின் உத்தரவை பின்பற்ற இருப்பதாக தெரிவித்துள்ளது. தெலங்கானாவில் ஏற்கனவே மே 7 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்