உத்தரப்பிரதேச மாநிலத்தில், மருமகளும் அவருடைய தாயாரும் சேர்ந்து மாமியாரை அடித்து கொடுமைப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலானதை அடுத்து, காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில், மருமகள் தனது தாயாருடன் சேர்ந்து வயதான மாமியார் சுதேஷ் தேவியை அடித்து கொடுமைப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. முன்னதாக, மாமியார் சுதேஷ் தேவி, தனது மருமகளும் அவரது தாயாரும் சேர்ந்து தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். ஆனால், அந்த புகார் ஏற்கப்படவில்லை என்றும், மருமகளின் குடும்பத்தார் காவல்துறையில் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்ததால் புகார் குறித்து விசாரணை செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தான், சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலானது. இதை தொடர்ந்து, காவல்துறையினர் வேறு வழியின்றி வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், தற்போது சுதேஷ் தேவியின் மருமகள் மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.