கொரோனாவால் 4 மாத குழந்தை பலி

வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (09:58 IST)
கொரோனாவால் கேரளாவில் 4 மாத குழந்தை பலி ஆகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பு மொத்தமாக 23,073 ஆக உள்ளது. 4,749 பேர் குணமடைந்துள்ள நிலையில் 718 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 6,427 ஆக உயர்ந்துள்ள நிலையில் 283 பேர் உயிரிழந்துள்ளனர். 283 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
 
தொடர்ந்து டெல்லியில் 2,376 பேரும், குஜராத்தில் 2,624 பேரும், ராஜஸ்தானில் 1,734 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,659 ஆக உள்ளது. தமிழகம் 1,683 பாதிப்பு எண்ணிக்கையுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
 
இதேபோல் முதல் 10 இடங்கள் பட்டியலில் இருந்து கேரளா வெளியேறியுள்ளது. கேரளாவில் பாதிப்பு குறைவாக இருந்தாலும் இன்று கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 4 மாத குழந்தை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளது கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதய நோயால் சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தை இன்று காலை உயிரிழந்தது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்