நாமக்கல் பகுதியை சேர்ந்த பவ பூரணி என்ற மருத்துவ கல்லூரி மாணவி, தனியார் மருத்துவ கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை இரவு பயிற்சிக்காக தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றி கொண்டிருந்த நிலையில், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை கழிவறையில் அவர் பிணமாகக் கிடந்தார். இது குறித்த தகவல் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலையில், உடனடியாக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பவபூரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.