பணம் இல்லா ஏடிஎம் வங்கிகளுக்கு அபராதம் - ரிசர்வ் வங்கி அதிரடி!

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (10:22 IST)
ஏடிஎம்களில் பணம் இல்லாத வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

 
ஆம், ஏடிஎம்-ல் பணம் இல்லாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அபராதம் விதிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதாவது,  தொடர்ந்து 10 மணி நேரத்திற்கு மேல் ஏடிஎம்-ல் பணம் இல்லாமல் இருந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுமாம். இதற்கு ஏற்றபடி வங்கிகள் பணம் நிரப்புவதற்கான தங்க்ளது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. 
 
வங்கி அல்லாத பிற நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ஏடிஎம் நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு இந்த புது அறிவிப்பு பொருந்தும் என தெரிவிக்கபட்டுள்ளது. ஏடிஎம்-ல் பணம் இல்லாததால் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்