தாமதமாகும் தென்மேற்கு பருவமழை: மழை அளவு எப்படி இருக்குமோ?

Webdunia
திங்கள், 31 மே 2021 (09:29 IST)
கேரளாவில் ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இம்முறை ஜூன் 3ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
முன்னதாக தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே மே 31 ஆம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இப்போது தாமதமாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளதாவது, 
 
தென்மேற்கு பருவக்காற்று ஜூன் ஒன்றாம் தேதி முதல் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதால், ஜூன் 3 ஆம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்தியாவில் அதிக மழை பொழிவு கொண்ட தென்மேற்கு பருவமழை, ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் தொடங்கி செப்டம்பர் வரை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்