மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும்,ஞானபீடவிருது பெற்றவருமான ஓ.என்.வி குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது முதன்முதலாக கேரளா அல்லாத தமிழக கவிஞர் வைரமுத்திற்கு கிடைத்துள்ளது. இதற்கு நடிகை பார்வதி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பெருமைக்குரிய இலக்கியவாதியான கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு கேரளாவின் புகழ்பெற்ற ஓ.என்.வி விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் கலைஞரின் கோபாலபுர இல்லத்திற்கு சென்ற வைரமுத்து இந்த விருதை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்து,. இவ்விருதை மறைந்த கலைஞர் கருணாநிதிக்குச் சமர்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் கேரள மாநிலத்தில் வழங்கப்படும் உயரிய விருதான ஓ.என்.வி விருது கவிஞர் வைரமுத்துக்கு வழங்கியதற்கு நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில், ஓஎன்வி ஐயாவின் ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியர் பங்களிப்பு போற்றுவதற்கு உரியது. அவரது பெயரில் பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டவருக்கு வழங்குவது அவமரியாதை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில், ஓஎன்வி விருதை கவிஞர் வைரமுத்து பெற்றதற்காக மறைந்த ஓஎன்வி பெருமைப்படுவார் எனத் தெரிவித்துள்ளார்.