புலம்ப ஆரம்பித்துவிட்டார் சோனியா காந்தி: ஸ்மிரிதி இராணி கிண்டல்

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (06:32 IST)
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டை முன்னிட்டு நேற்று இதுகுறித்து பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் பேசினர். பிரதமர் மோடி பேசியபோது சுதந்திர போராட்ட வீரர்கள் பலர் பெயரை குறிப்பிட்டார். ஆனால் சோனியா காந்தி தனது உரையில் நேருவின் பெருமை குறித்தே அதிகம் பேசினார்.



 
 
இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஸ்மிதி இராணி, 'காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேச்சு, பண்டிட் ஜவஹர்லால் நேரு பற்றிய புலம்பலாகவே இருந்தது. நாட்டுக்காக போராடிய பெரும் தலைவர்களான சுபாஷ் சந்திர போஸ் மற்றும் வல்லபாய் பட்டேல் பற்றி அவர் எதுவுமே குறிப்பிடவில்லை.
 
ஆனால், பிரதமர் மோடி பேசியது முற்றிலும் வேறு விதமாக இருந்தது. முன்னோக்கிய பார்வை, நாட்டை ஒற்றுமைப்படுத்துவதாக, கருணை நிரந்த பேச்சாக, நாட்டுக்கு தேவைப்படும் பேச்சாக இருந்தது. மகாத்மா காந்திக்கு மட்டும் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தவில்லை. சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் நாட்டுக்காக போராடி உயிர் நீத்த அனைத்து பெண்களுக்கும் அஞ்சலி செலுத்தினார். எனவே இதன்மூலம் பிரதமர் மோடிக்குத்தான் நாட்டுப்பற்று அதிகம் என்பது என்பது நிரூபணம் ஆகியுள்ளது' என்று கூறினார்.
 
ஸ்மிதி இராணியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்