நேற்று முதல் அந்தமானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம்: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திங்கள், 10 ஏப்ரல் 2023 (08:25 IST)
நேற்று மதியம் முதல் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து ஆறுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
நேற்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள சில பகுதிகளில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து ஆறுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளுக்கு செல்ல பயந்து கொண்டு வெளியிலேயே நிற்பதாகவும் கூறப்படுகிறது.
 
இன்று அதிகாலை 2.26 மணிக்கு அந்தமானில் உள்ள பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோல் 4.6  என்று பதிவானதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
4.6, 4.9, 4.1, 5.3, 3.9, 5.5 என்ற ரிக்டர் அளவில் அடுத்தடுத்து ஆறுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்