காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்… லியோ படக்குழு கொடுத்த அப்டேட்

புதன், 22 மார்ச் 2023 (09:39 IST)
விஜய் அடுத்து நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது இந்த படத்தின் டைட்டில் வீடியோ வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இந்நிலையில் இப்போது திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடிப்பதற்கு மோசமான வானிலை காரணமாக மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் படக்குழு அங்கேயே தங்கி இப்போது ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் மற்றும் கௌதம் மேனன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் லோகேஷ். சமீபத்தில் சஞ்சய் தத், லியோ ஷூட்டிங்கில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் ஷூட்டிங்கை முடித்து விரைவில் சென்னை திரும்ப உள்ள நிலையில், நேற்று காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் லியோ படக்குழு பத்திரமாக இருப்பதாக லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் 7ஸ்கீர்ன் ஸ்டுடியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Seven Screen Studio (@7_screenstudio)

வெப்துனியாவைப் படிக்கவும்