நகைக்கடையில் துப்பாக்கிச்சூடு! திருடர்களை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைப்பு!

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (20:47 IST)
தெலுங்கானா மாநிலம்  ஐதராபாத்தில் உள்ள சினேகாபுரியில்  உள்ள ஒரு  நகைக்கடையில்,  4 பேர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்  நாகோல் பகுதியில் உள்ள சினேகாபுரியில் கல்யாண சவுத்ரி என்பவர் நகைக்கடை  நடத்தி வருகிறார்.

இவர் கடைக்கு செகந்திராபாத்தைச் சேர்ந்த சுக் தேவ் மொத்தமாக  நகைகளை   வி நியோகத்து வந்தார்.

நேற்று இக்கடைக்கு   நகைகள் விநியோகிப்பதை அறிந்த 4 பேர் கொண்ட கும்பல் இரவு பத்து மணிக்கு வந்து, சவுத்ரியின் கடையில் புகுந்து, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி,  நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர்.

நகைகளை கொடுக்க கல்யாண் சவுத்ரி மற்றும் தேவ் ஆகியோர் மறுத்தனர்.   உடனே அவர்கள் மீது மர்ம கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

கல்யாணி சவுத்ரியின் மீது துப்பாக்கி சூடு  நடத்தப்பட்டது.

இதில், காயமடைந்தவர்களை  அருகிலுள்ளோர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி, 15 தன்ப்படை அமைக்கப்பட்டு  குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்