ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், ஆரம்பம் முதலே பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்தது. ஆனால் தற்போது திடீரென திருப்பம் ஏற்பட்டு, காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. இதில் 50 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி, 28 தொகுதிகளில் மற்றும் மூன்று தொகுதிகளில் பிற கட்சிகள் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா கூட்டணியில் உள்ள ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சி 29 தொகுதிகளில், காங்கிரஸ் 13 தொகுதிகளில், மற்றும் இந்தியா கூட்டணியின் மற்றொரு கட்சி ஐந்து தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதேபோல், பாஜக 27 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலை தொடர்ந்தால், ஜார்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
அதே சமயம், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்ப முதலே பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. தற்போது, அந்த கூட்டணி 220 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி உறுதியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.