நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியாச்சு; மோடி வெளிநாட்டுக்கு பறந்தாச்சு!

Webdunia
புதன், 25 ஜூலை 2018 (20:44 IST)
பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாள் பயணமாக பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ளார். தென் ஆப்ரிக்கா செல்லும் வழியில், ருவாண்டா நாட்டுக்கு சென்றுள்ளார். 
அங்கு அந்நாட்டுடன் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. மேலும் 200 பசுமாடுகளை பரிசாகவும் வழங்கியுள்ளார். 200 மில்லியனை கடனாகவும் வழங்கியுள்ளார். 
 
ஆனால், இங்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரபேல் போர்விமான விவகாரத்தில் மோடி மீதும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டுவர காங்கிரஸ் கட்சி மனு அளித்துள்ளது.
 
இந்நிலையில், மோடியை கிண்டல் செய்யும் விதமாக பாஜகவின் மூத்த எம்பியும், இந்தி நடிகருமான சத்ருகன் சின்ஹா தனது டிவிட்டரில், மோடி சார், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கிவிட்டது. வழக்கம்போல் அதில் பங்கேற்காமல் 3 நாடுகள் ஆப்பிரிக்க பயணம் சென்றுவிட்டீர்கள். 
 
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்தபின் நீங்கள் இந்த பயணத்தை மேற்கொண்டால், வேறு ஏதேனும் மிகப்பெரிய பிரச்சனை வந்துவிடாதே. உலகில் இன்னும் நீங்கள் சுற்றிப்பார்க்க வேண்டிய நாடுகள் சில இருக்கின்றன. கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்குச் சென்ற முதல் பிரதமர் நீங்கள்தான் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்