மோடியின் கைகளில் ரத்தத்தின் கறை: மம்தா பானர்ஜி ஆவேசம்!

திங்கள், 23 ஜூலை 2018 (15:53 IST)
நாடாளுமன்றத்தில் பாஜவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில், பாஜக மீது பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார் மம்தா பானர்ஜி .
 
அவர் கூறியது பின்வருமாறு, பாஜக பரப்பிவரும் வெறுப்பு அரசியலால்தான் கடந்த பல மாதங்களாக நாட்டில் படுகொலைகள் நடந்து வருகின்றன. 
 
பாஜக தலைமை தாலிபான் இந்துத்துவாவை பரப்பி வருகிறது. பிரதமர் மோடியின் கைகளில் ரத்தத்தின் கறை உள்ளது. அவர் தன்னை ஹிட்லர், முசோலினியைவிட மிகப்பெரிய சர்வாதிகாரி என நினைத்துக்கொண்டிருக்கிறார். 
 
நாடாளுமன்றத்தில் வேண்டுமானால் பாஜக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்திருக்கலாம். ஆனால், நாட்டில் பாஜகவுக்கு ஆதரவு இல்லை. 
 
பாஜக தங்களது மிக பழமையான கூட்டாளியான சிவசேனாவை இழந்துள்ளது. பாஜக கூட்டணிகள் ஒவ்வொன்றாக குறைந்தபடி உள்ளன. கடந்த தேர்தலில் 325 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக  2019 ஆம் ஆண்டு தேர்தலில், 100 தொகுதிகளை தாண்ட முடியுமா என்பதே சந்தேகம்தான் என கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்