மீண்டும் தொடர் சரிவில் சென்செக்ஸ்: கோடிக்கணக்கில் முதலீட்டாளர்கள் நஷ்டம்!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (09:49 IST)
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சரிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 60 ஆயிரத்துக்கும் அதிகமான இருந்த சென்செக்ஸ் தற்போது 56 ஆயிரம் என்ற நிலையில் வர்த்தகமாகி வருவதால் கோடிக்கணக்கில் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர் 
 
நேற்று ஆரம்பத்தில் 500 புள்ளிகள் உயர்ந்து இருந்தாலும் அதன் பின்னர் படிப்படியாக சரிந்து சரிவில் வர்த்தக முடிந்தது. இந்த நிலையில் இன்று 250 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்து 56 ஆயிரத்து 850 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 80 புள்ளிகள் சரிந்து 16 ஆயிரத்து 930 இந்த புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்