மீண்டும் சரிவில் பங்குச்சந்தை: சோகத்தில் முதலீடாளர்கள்!

வியாழன், 22 செப்டம்பர் 2022 (09:39 IST)
பங்குச்சந்தை இந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது என்பதும் சென்செக்ஸ் முதல் இரண்டு நாள் ஏற்றத்திலும் அடுத்த இரண்டு நாள் சரிவிலும் உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் சற்று முன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் இன்று மீண்டும் பங்குச் சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் 250 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்து 59220 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் நிப்டி 65 புள்ளிகள் சரிந்து 17650 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே சென்செக்ஸ் நேற்று சரிந்தது முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்த நிலையில் இன்றும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்