தேர்வில் பாஸ் செய்வதாக ஏமாற்றி மாணவியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (14:40 IST)
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் பெயிலான பாடத்தில் பாஸ் செய்து தருவதாக ஏமாற்றி 10ஆம் வகுப்பு மாணவி ஒருவரை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் உடற்கல்வி பாடப்பிரிவில் தோல்வி அடைந்துவிட்டார்.

இந்த பாடத்தில் பாஸ் செய்து வைக்க உதவி செய்வதாகவும் அதற்காக ரூ.10 ஆயிரம் வேண்டும் என்றும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவியின் தந்தையிடம் கூறியுள்ளார். இதற்கு சம்மதம் என்றால் ஒரு முகவரியை கொடுத்து அங்கு பணத்துடன் வருமாறு தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

இதனை நம்பி பணத்துடன் மாணவியை அழைத்து கொண்டு தலைமை ஆசிரியர் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது பணத்தை வாங்கிக்கொண்டு இந்த மாணவிக்கு பதிலாக வேறு ஒரு மாணவி தேர்வு எழுதி கொண்டிருப்பதாகவும், தேர்வு முடியும் வரை மாணவி இங்கேயே இருக்கட்டும் என்றும் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். இதனை நம்பி மகளை அங்கேயே விட்டுவந்த தந்தை பின் மீண்டும் திரும்பியபோது தனது மகள் தலைமை ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை போலீசில் புகார் செய்ததை அடுத்து தப்பியோடிய தலைமை ஆசிரியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்