9ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்.. கழிவறையில் தனக்கு தானே பிரசவம் பார்த்த அதிர்ச்சி சம்பவம்..!

Siva

வியாழன், 28 ஆகஸ்ட் 2025 (16:36 IST)
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில், 9-ம் வகுப்பு மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி, பள்ளியின் கழிவறையிலேயே பிரசவம் பார்த்துள்ளார். 
 
இந்த சம்பவம் நேற்று நடந்திருந்தாலும், இன்று தான் வெளிச்சத்துக்கு வந்தது. இது குறித்து அறிந்த கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் சசிதர் கொசாம்பே, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
மேலும், இந்தச் சம்பவம் குறித்து ஆணையத்திற்குத் தெரிவிக்க தவறிய பள்ளி முதல்வர் மற்றும் ஊழியர்கள் மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அந்த மாணவியின் உடல்நிலையை உள்ளூர் சுகாதார அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் கண்காணித்திருக்க வேண்டும். ஆனால், இதில் அலட்சியம் நடந்திருப்பதாக தெரிகிறது. அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்