தமன்னாவுக்கு ரூ.6.20 கோடி சம்பளம் கொடுத்த கர்நாடக அரசு! பாஜக எம்.எல்.ஏ கேள்விக்கு பதில்!

Prasanth K

ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2025 (10:32 IST)

நடிகை தமன்னாவுக்கு கொடுத்த சம்பளம் தொடர்பாக கர்நாடக எம்.எல்.ஏ சுனில் குமார் எழுப்பிய கேள்விக்கு மாநில அரசு பதில் அளித்துள்ளது.

 

இந்தியாவில் பல ஆண்டுகளாக மக்களிடையே பிரபலமாக உள்ள சோப் நிறுவனம் மைசூர் சாண்டல் சோப். கர்நாடக அரசால் நிர்வகிக்கப்பட்டு வரும் மைசூர் சாண்டல் நிறுவனம்தான் இந்தியாவில் அதிக சந்தன எண்ணெய்யை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சோப்பாக உள்ளது.

 

1916ல் மைசூர் மகாராஜா கிருஷ்ண ராஜ வாடியாரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் சுதந்திரத்திற்கு பிறகு கர்நாடக மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மைசூர் சாண்டல் நிறுவனத்தின் விளம்பர செலவுகள் குறித்து பாஜக எம்.எல்,ஏ சுனில் குமார் கேள்விகள் எழுப்பியிருந்தார்.

 

இது தொடர்பாக விரிவான பதிலை அளித்த கர்நாடக அரசு, மைசூர் சாண்டல் நிறுவனத்தின் அனைத்து கணக்குகளையும் வெளியிட்டது. இதில் நடிகை தமன்னாவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு சோப் விளம்பரத்திற்காக ரூ.6.20 கோடி ரூபாய் சம்பளமாக தரப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்