சிபிஐ இயக்குனர் கட்டாய விடுப்பு வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (11:03 IST)
சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மாவை நீக்கியது செல்லாது என்றும், அவரிடம் மீண்டும் சிபிஐ இயக்குனர் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளது.

ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதைத் தொடர்ந்து இணை இயக்குநர் எம். நாகேஸ்வர் ராவ் இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.

தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பியது சட்டவிரோதம் என்று அலோக்வெர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் சற்றுமுன் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. இது மத்திய அரசின் மற்றொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும்  இது தொடர்பாக பிரச்னை தீராதவரை அலோக் வர்மா முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்