தவறான வங்கிக்கணக்கிற்கு ரூ.100 கோடியை டெபாசிட் செய்த எஸ்பிஐ வங்கி

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (22:32 IST)
ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி நகரில் உள்ள எஸ்பிஐ வங்கி, மதிய உணவு திட்டத்திற்காக வழங்க வேண்டிய ரூ.100 கோடியை தவறுதலாக ஒரு கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்துவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்படுள்ளது.



 
 
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் செப்டம்பர் 19ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் எஸ்பிஐ வங்கி, மதிய உணவு திட்டத்திற்காக டெபாசிட் செய்வதற்கு பதிலாக முன்னணி கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்துள்ளது.
 
தற்போது இந்த தவறு கண்டுபிடிக்கப்பட்டாலும், கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.70 கோடி மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளது. மீதி ரூ.30 கோடியை பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்