ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. அவரை நாங்கள் சந்தித்தோம், அவர் இட்லி சாப்பிட்டார். நல்ல உடல் நலத்துடன் இருந்தார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார் என அமைச்சர்கள் இதுவரை தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது சசிகலா குடும்பத்தை அமைச்சர்கள் எதிர்ப்பதால், நாங்கள் அப்போது பொய் கூறினோம் சசிகலா குடும்பதம் தான் எல்லாத்துக்கும் காரணம் என கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளா்களை சந்தித்த சீமான் ஜெயலலிதா மரணம் தொடா்பாக அமைச்சா்கள் மாறி மாறி பேசுவதில் இருந்து அவரது மரணத்தில் ஏதோ நடந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி அரசு சொல்வதையே கேட்டு செயல்படுவார் என தெரிவித்தார். ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார் என கூறிய நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு வர காரணம் என்ன?.