பாகிஸ்தானுக்கு தக்காளியை பெருமளவு அனுப்பும் இந்தியா, கடந்த சில மாதங்களாக கண்டெய்னர்கள் எல்லையை கடப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அனுப்பப்படவில்லை. இதுவே தக்காளி விலையேற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது
இதுகுறித்து பாகிஸ்தான் உணவுத்துறை மந்திரி ஷிகந்தர் போசான் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தானில் இப்போது நிலவும் தக்காளி மற்றும் வெங்காய பற்றாக்குறையானது சில நாட்களில் சரிசெய்யப்படும், பலுசிஸ்தானில் இருந்து விளைச்சல் பொருட்கள் வந்ததும் நிலை சீராகும். எந்த நிலையிலும் இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் காய்கறிகளை வாங்காது என அவர் கூறியுள்ளார்.