மன்னிப்பு கேட்டதற்கான ஆதாரத்தை காட்டுங்கள்: ராகுல்காந்திக்கு சாவர்கரின் பேரன் சவால்

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (13:21 IST)
மன்னிப்பு கேட்பதற்கு நான் சாவர்கர் அல்ல, காந்தி என சமீபத்தில் ராகுல் காந்தி பேசியதற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ராகுல் காந்தி பதவி நீக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த ஒரு சில அரசியல் கட்சியினர் கூட ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சாவர்க்கரின் பேரன் மன்னிப்பு கேட்டதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் என ராகுல் காந்திக்கு சவால் விடுத்துள்ளார். 
 
அவர் இது குறித்து மேலும் கூறிய போது ’தான் சாவர்க்கார் இல்லை என்பதால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும் என்று நான் சவால் விடுகிறேன். ஆனால் அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி இரண்டு முறை மன்னிப்பு கேட்டிருக்கிறார், ராகுல் காந்தியின் பேச்சு சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். 
 
ராகுல் சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்கர் அவர்கள் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கு ராகுல் காந்தி தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்