ரூ.166 கோடி சொத்து.. இருந்தும் அஜித் பவார் மனைவியிடம் 35 லட்சம் கடன் - வேட்புமனுவில் சுப்ரியா தகவல்!

Mahendran
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (15:22 IST)
தன்னை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரிடம்  35 லட்சம் கடன் வாங்கிய முன்னாள் முதல்வர் மகள்..!
 
மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே இன்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் அஜித் பவாரின் மனைவியிடம் 35 லட்சம் கடன் வாங்கி இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார் 
 
முன்னாள் மத்திய அமைச்சர்  மற்றும் முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே பாராமதி தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து அஜித் பாரின் மனைவி சுனேத்ரா போட்டியிடுகிறார்
 
இந்நிலைஇல் சுப்ரியா தனக்கு 166 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில் தன்னை எதிர்த்து போட்டியிடும் சுனேத்ராவிடம் 35 லட்சம் கடன் வாங்கி இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார் அதேபோல் அஜித் பவார் மகனிடம் 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
166 கோடி சொத்து வைத்திருப்பவர் எதற்காக 35 லட்சம் கடன் வாங்கி உள்ளார் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். அதேபோல் பாராமதி தொகுதியில் போட்டியிடும் அஜித் பவர் மனைவி சுனேத்திரா தனக்கு 58 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் தனது மாமியார் தனக்கு இரண்டு கோடி கடன் வழங்க வேண்டிய இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்