சேலத்தில் 2 வாக்காளர்கள் உயிரிழப்பு: அறிக்கை கேட்ட சத்யபிரத சாஹு..!

Mahendran
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (15:15 IST)
சேலத்தில் வாக்களிக்க வந்த இரண்டு வயதானவர்கள் வெயில் கொடுமை தாங்காமல் சுருண்டு விழுந்து மரணம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து அறிக்கை கேட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர்  சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். 
 
சேலத்தில் நடந்த சம்பவம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு அனைத்து வாக்கு சாவடிகளிலும் பந்தல் மற்றும் வேட்பாளர் அமர்வதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் வாக்காளர்கள் தங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் அதே நேரத்தில் வாக்களிப்பதற்கு இன்னும் அதிக நேரம் இருப்பதால் வெயில் குறைந்தவுடன் மாலை நேரத்தில் கூட வாக்களிக்கலாம் என்றும் அவர் கூறினார் 
 
அனைத்து சாவடிகளிலும் மருத்துவ வசதிகள் மேற்கொள்ளவில்லை என்றும் ஆனால் மருத்துவத் துறைக்கு முன்கூட்டியே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்