மகாராஷ்டிரா மாநிலத்தை பொருத்தவரை ஷிண்டேவின் சிவசேனா ஏற்கனவே 13 எம்பிகள் வைத்துள்ள நிலையில் 15 எம்பி தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் 10 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என பாஜக தரப்பில் கூறியதாக செய்திகள் வெளியானது.
இதனை அடுத்து பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்த நிலையில் தற்போது 13 தொகுதிகள் கொடுக்க பாஜக ஒப்பு கொண்டதாக தெரிகிறது. மேலும் அஜித் பவார் தலைமையில் ஆன தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது