சமஸ்கிருதம் தான் இந்தியாவின் தேசிய மொழி: நடிகை கங்கனா

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (07:45 IST)
இந்தி மொழி தான் தேசிய மொழி என சமீபத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது நடிகை கங்கனா ரனாவத் சமஸ்கிருத மொழி தான் இந்தியாவின் தேசிய மொழி என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தியாவின் பழமையான மொழி சமஸ்கிருதம் மொழிதான் என்றும் தமிழ் கன்னடம் குஜராத்தி உள்ளிட்ட மொழிகளை விட சமஸ்கிருதம்தான் பழமையானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 எனவே பழமையான மொழியான சமஸ்கிருதத்தை ஏன் இந்தியாவின் தேசிய மொழியாக்க கூடாது என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தியாவின் தேசிய மொழி சமஸ்கிருதம் என கங்கனா ரனாவத் கூறியிருப்பதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்