இப்ப மட்டும் பாலிவுட் சினிமா வாயை மூடிக்கும்..! – வம்பிழுக்கும் கங்கனாவின் பதிவு!

திங்கள், 14 மார்ச் 2022 (13:06 IST)
தி காஷ்மீர் பைல்ஸ் படம் குறித்து பேசாமல் பாலிவுட் சினிமா மௌனம் காப்பதாக கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

இந்தி திரைப்பட இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. கடந்த 11ம் தேதி வெளியான இந்த படத்தில் பல்லவி ஜோஷி மற்றும் பலர் நடித்துள்ளனர். காஷ்மீரிலிருந்து இந்து பண்டிட்டுகள் வெளியேறியதன் பின்னணி குறித்து வெளியாகியுள்ள இந்த படத்தை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கனா ரனாவத் “தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து பாலிவுட் வட்டாரங்களில் நிலவும் மயான அமைதியை கவனியுங்கள். இந்தப் படம் ஒவ்வொரு கட்டுக்கதையையும் உடைத்துள்ளது. இந்த வருடத்தின் வெற்றிகரமான மற்றும் லாபம் ஈட்டும் படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்