சபரிமலை நடைதிறப்பு- போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலைப்பு

Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (17:25 IST)
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக பெண்களைக் கோயிலினுள் அனுமதிக்காமல் போராடி வந்த போலிஸ்காரர்கள் தடியடி நடத்திக் கலைத்துள்ளனர்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக் கோயிலுக்குள் நுழையலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து இன்று ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து  இந்து அமைப்புகளும் ஐய்யப்ப பகதர்களும் பாஜகவின் தலைமையில் பம்பை மற்றும் நிலக்கல்லில் முற்றுகையிட்டு கோயிலுக்கு வரும் பெண் பக்தர்களை வழிமறிக்கும் போராட்டத்தில் காலையில் இருந்து ஈடுபட்டனர். இதற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனாலும் ஆளும் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருந்து பெண்பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

போராட்டக்காரர்களை காலையில் இருந்து அமைதியாக கலைந்து செல்லுமாறு வலியுறுத்திய காவல்துறை சற்று முன்னர் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தது. இதனால் அந்த பகுதிகளில் கல்வீச்சு, வாகனங்களைத் தாக்குதல் போன்ற எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்றன. செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

ஆனாலும் காவல்துறையின் உதவியோடு குறிப்பிட்ட நேரத்தில் சபரிமலைக் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்