நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்! – சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (08:31 IST)
கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் யாத்திரை செல்வது குறைந்திருந்தது. மேலும் சபரிமலை நிர்வாகம் குறிப்பிட்ட அளவு பக்தர்களை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதித்து வந்த நிலையில் சபரிமலை சன்னிதானத்தில் குளிப்பது, தங்குவதற்கும் தடை இருந்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா தளர்வுகளை தொடர்ந்து தினசரி அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 45 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 40 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலமாகவும், 5 ஆயிரம் பேர் நேரடி டிக்கெட் மூலமாகவும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பம்பை நதியில் குளிப்பதற்கும், தங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரியில் மகர விளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில் தற்போது பக்தர்கள் கூட்டம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக சபரிமலையில் போலீஸார் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்