இன்று முதல் சபரிமலையில் குளிக்கலாம், தங்கலாம்! – பக்தர்கள் மகிழ்ச்சி!

சனி, 11 டிசம்பர் 2021 (08:28 IST)
கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் சபரிமலை நிர்வாகம் மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் பல கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் சபரிமலையிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. முன்னதாக சபரிமலை செல்லும் பக்தர்கள் ஆற்றில் குளிக்கவும், தங்கவும் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி என்ற நிலை இருந்தது.

இந்நிலையில் மெல்ல தளர்வுகள் அறிவித்துவரும் சபரிமலை தேவசம்போர்டு இன்று முதல் சபரிமலை வரும் பக்தர்கள் பம்பை நதியில் குளிக்கலாம் என்றும், சன்னிதானத்தில் தங்கலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சபரிமலை செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்