விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

Siva
திங்கள், 20 மே 2024 (15:47 IST)
உத்தரப் பிரதேசம் மாநில விவசாயி வங்கி கணக்குக்கு திடீரென 9900 கோடி ரூபாய் வந்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த விவசாயி வங்கிக்கு தகவல் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன

உத்தரப்பிரதேச சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வங்கி கணக்கை சரிபார்த்த போது அதில் 9900 கோடி ரூபாய் வந்திருப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கி நிர்வாகி இடம் கூறிய போது வங்கி அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர்
 
இதையடுத்து வங்கி அதிகாரிகள் அவரது கணக்கை ஆய்வு செய்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வங்கி மேலாளர் கூறியபோது ’துரதிஷ்டவசமாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக விவசாயி வங்கி கணக்குக்கு 9900 கோடி வந்திருப்பதாகவும் விரைவில் அது சரி செய்யப்படும் என்றும் அதுவரை வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்

பிரகாஷ் என்ற அந்த விவசாயி வங்கி கணக்குக்கு திடீரென மிகப் பெரிய தொகை வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்