ரெப்போ விகிதம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட ரிசர்வ் வங்கி; சாமானிய மக்களுக்கு சுமை..!

Mahendran
புதன், 9 அக்டோபர் 2024 (11:56 IST)
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்று அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டத்தில் எடுத்த முடிவுகளை குறிப்பிட்ட அவர், ரெப்போ விகிதம் 6.5% ஆகவே நீடிக்கும் என தெரிவித்தார்.

2023 பிப்ரவரியில் இருந்து இதுவரை ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படாதது இதனோடு 10-வது முறையாக இருக்கின்றது.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியில் இருந்து எடுக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதமாகும். ஒவ்வொரு இரு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதி கொள்கை குழு கூடி, ரெப்போ விகிதம் குறித்த தீர்மானங்களை எடுப்பது வழக்கம். அந்த வகையில், இன்று நடைபெற்ற கூட்டத்தின் முடிவுகளை ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் ரெப்போ விகிதத்தின் உயர்வு அல்லது குறைபாட்டின் அடிப்படையில் மாற்றம் அடையும். ஆனால், தொடர்ந்து 10 முறை ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யப்படாததால், வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை. இது பொதுமக்களுக்கு குறையாகவே இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்