டவ்-தே புயல் - கேரள அரசு ரெட் அலெர்ட் எச்சரிக்கை !

Webdunia
சனி, 15 மே 2021 (08:20 IST)
டவ்-தே புயல் காரணமாக எட்டு மாவட்டங்களுக்கு கேரள அரசு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 
இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 
 
தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் இது புயலாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு டவ்-தே என பெயரிடப்பட்டுள்ள நிலையில் இது குஜராத் நோக்கி நகர வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் டவ்-தே புயல் கரையை கடக்கும் வாய்ப்புள்ளது என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைக்கு பின்னர் எட்டு மாவட்டங்களுக்கு கேரள அரசு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆம், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்