டவ்-தே புயல் - தமிழகத்துக்கு ரெட் அலர்ட்..!

வெள்ளி, 14 மே 2021 (12:01 IST)
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான சூழலில் நாளை அது புயலாக மாறுவதால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

 
இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
 
தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் இது நாளை புயலாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு டவ்-தே என பெயரிடப்பட்டுள்ள நிலையில் இது குஜராத் நோக்கி நகர வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
புயல் காரணமாக தமிழகத்திற்கு 5 நாட்களுக்கு இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதோடு புயல் மற்றும் கனமழையை எதிர்க்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்