செல்ஃபி புகைப்படத்தால் பதவியை இழந்த பெண் அதிகாரி

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (17:37 IST)
பாலியல் வல்லுறவுக்கும், குடும்ப வன்கொடுமைக்கும் உள்ளாகி, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணுடன், சிரித்தபடி புகைப்படங்கள் எடுத்துகொண்டதாக விமர்சிக்கப்பட்ட இந்திய பெண் அதிகாரி ஒருவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
 

 
தான் தவறு ஏதும் செய்யவில்லை. அந்த பெண்ணிடம் கேட்டுகொண்ட பிறகே புகைப்படங்கள் எடுத்துகொண்டதாக, பதவியை துறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட ராஜஸ்தான் பெண்கள் ஆணையத்தின் உறுப்பினரான சோம்யா குர்ஜார் தெரிவித்திருக்கிறார்.
 
சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டபோது, அந்த புகைப்படங்கள் பற்றி அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
 
உணர்வற்று போய் விட்டதாகவும், பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவரின் விவரங்கள் மறைக்கப்படுவதற்கு எதிராக செயல்பட்டிருப்பதாகவும் குர்ஜாரை விமர்சகர்கள் குற்றம் சாட்டினர்.
 
அதிக வரதட்சனை கொடுக்க தவறியதால் கணவராலும், கணவருடைய இரண்டு உறவினர்களாலும் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரையில்