மருமகளை அரிவாளால் வெட்டிய மாமியார் தற்கொலை

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (17:35 IST)
மாமியார் விஷம் அருந்தி விட்டு மருமகளை அரிவாளால் வெட்டி தற்கொலை செய்து கொண்டார்.


 

 
சிவகாசி அருகே நதிக்குடி பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி(70). இவரது மகன் கொலை செய்யப்பட்டு இறந்தார். மருமகள் விஜயா(36) பட்டாசு தயாரிக்க பயன்படும் குழாய் தாயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
 
சீதலட்சுமி மகன் கொலை செய்யப்பட்ட விரத்தியில் இருந்துள்ளார். ஆனால் விஜயா தனது கணவன் இறந்த கவலை இல்லாமல் இருந்ததாக சீதாலட்சுமி கூறி வந்துள்ளார்.
 
இந்நிலையில் வியாழக்கிழமை சீதாலட்சுமி விஷம் அருந்திவிட்டு, மருமகளை அரிவாளால் வெட்டிவிட்டு அவரும் இறந்து விட்டார். அதில் காயம் அடைந்த மருமகள் விஜயா சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
  
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்