ஆன்லைன் டிக்கெட் புக்கிங் – மீண்டும் தொடங்கப்பட்ட சேவைக்கட்டணம் !

Webdunia
ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (10:41 IST)
ரயில்வே இணையதளத்தில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கிற்காக நீக்கப்பட்ட சேவைக் கட்டணம் இன்று முதல் மீண்டும் அமலுக்கு வர இருக்கிறது.

இந்தியன் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான IRCTC-ல்  முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுக்கான சேவை கட்டணத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இப்போது அந்த சேவைக் கட்டணம் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

சி வசதி இல்லாத ரயில் பெட்டியில் பயணிப்போர் டிக்கெட் ஒன்று முன்பதிவுக்குச் சேவை கட்டணமாக 15 ரூபாயும், ஏ.சி முதல் வகுப்பு, 2ஆம் வகுப்பு, 3 அடுக்கு ஏசி ஆகிய அனைத்து பிரிவில் டிக்கெட் முன்பதிவுக்குச் சேவை கட்டணமாக 30 ரூபாயும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த சேவைக் கட்டணத்தை மீண்டும் தொடங்கியதற்கு வருமானக் குறைவேக் காரணம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்